Shopping Cart
/
/
Sri Arunachala Akshara Manamalai – Part 01 (tamil)

Sri Arunachala Akshara Manamalai – Part 01 (tamil)

250.00

ஒரு முறை, பிக்‌ஷை எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட போது, ரமண மஹரிஷியின் சீடரான பெருமாள் சுவாமி என்பவர், ரமணர் மஹரிஷியிடம் தங்களுக்கென்று ஒரு பிரத்யேக பிரார்த்தனை பாடலை அருளுமாறு வேண்டுகோள் வைத்தார். ஒரு நாள் கிரிவலம் சென்றபோது ரமணர் மஹரிஷி தன் இதயத்திலிருந்து பொங்கி வரும் 108 அற்புதப் பாசுரங்களால் ஆன “அக்ஷர மணமாலை” என்ற ஸ்தோத்திரப் பாடலை முழுமையாக அருளினார்கள். இந்தப் பாடல், பக்தியும் ஸ்ருங்காரமும் கலந்த அற்புத ரஸமயக் காப்பியம்.

இந்த தெய்வீக அருள்பாட்டின் முதல் பலனாகவே பிக்ஷை தட்டுப்பாடு நீங்கியது என்று “Day by Day with Bhagavan” புத்தகத்தில், ஶ்ரீ ரமணர் மஹரிஷியே ஒரு சமயம் குறிப்பிட்டதாக குறிப்புள்ளது. ஆனால் அதன் சக்தி அதைக் கடந்தது.

“அக்ஷர மணமாலை” ரமணரின் அழியாத அருட்பரிசாக இன்றும் பக்தர்களை ஆத்ம ஞான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may be interested in.